
பெரியார் மண்ணில் ஆன்மிக அரசியல் ஆரம்பித்துள்ளதற்காக தனது மகிழ்ச்சியை மறைமுகமாக ட்விட்டர் பக்கத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகவும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட இருப்பதாகவும் அறிவித்திருந்தார். அவரது கொள்கையாக ஆன்மிக அரசியல் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக் காட்டி உள்ள ஹெச்.ராஜா, “இது பெரியார் மண். பிள்ளையாரை உடைத்த மண். ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்ட மண். அடியே மீனாக்ஷி உனக்கு எதற்கு வைர மூக்குத்தி, கழட்டடி கள்ளி என்ற மண். தில்லை நடராஜனையும், திருவரங்க நாதனையும் பீரங்கி வாயில் வைத்து பிளக்கும் நாள் பொன்னாள் என்ற மண். ஆனால் இங்கு ஆன்மீக அரசியல். சபாஷ்” என்று மறைமுகமாக திராவிட கட்சிகளை விமர்சித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.