[X] Close

ஹேக்கர்களால் முடக்கப்பட்ட முரசொலி இணையதளம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது

Murasoli-Website-Restored

ஹேக்கர்களால் முடக்கப்பட்ட திமுகவின் முரசொலி நாளிதழின் இணையதளம் பயன்பாட்டிற்கு வந்தது.


Advertisement

திமுகவின் அதிகாரப்பூர்வமான முரசொலி நாளிதழின் இணையதளத்தை ஹேக்கர்கள் இன்று முடக்கினர். முரசொலி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் ஹேக்கர் படத்துடன் புத்தாண்டு வாழ்த்தையும் பதிவிட்டிருந்த  ஹேக்கர்கள் இணையதள பாதுகாப்பு குறித்து இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்திருந்தனர். இதனிடையே, முடக்கப்பட்ட  முரசொலி இணையதள பக்கத்தை சீரமைக்க தொழில்நுட்ப குழுவினர் தீவிர நடடிவக்கை எடுத்து வந்தனர்.இதுதொடர்பாக திமுக ஐ.டி பிரிவு நிர்வாகிகள் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்த நிலையில் இணையதளம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close