[X] Close

ஆர்.கே.நகர் தேர்தல் பரப்புரை இன்றுடன் ஓய்வு

Rk-Nagar-election-campaign-completed-today

ஆர்.கே.நகர் தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களான மதுசூதனன், மருதுகணேஷ், சுயேட்சைகள் உள்பட 59 பேர் களத்தில் உள்ளனர். இதனிடையே இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் ஓய்வுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் இறுதிகட்ட பரப்புரையில் இன்று தீவிரமாக ஈடுபட உள்ளன.

பரப்புரை முடிந்ததும் தொகுதிக்கு தொடர்பில்லாத வெளியூரை சேர்ந்த கட்சிக்காரர்கள் வெளியேற வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை ஆகும். அந்த வகையில் மாலை பரப்புரை ஓய்ந்ததும் வெளியூரை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் வெளியேற வேண்டும். அதை உறுதி செய்யும் வகையில் தொகுதிக்குப்பட்ட பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள், சமூக நலக்கூடங்களை தேர்தல் அதிகாரிகள், போலீசார் கண்காணிக்க உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறுவோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

ஆர்.கே.நகர் தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 24 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதனிடையே, இன்று மாலை முதல் வாக்குபதிவு நடைபெறும் 21-ம் தேதி வரை கருத்துக் கணிப்புகள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close