[X] Close

4 நாள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புது விதிமுறை!

Four-day-Test-to-have-98-overs-a-day

நான்கு நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு புதிய விதிமுறைய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வகுத்துள்ளது.


Advertisement

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 5 நாட்கள் கொண்டது. அதில் மேலும் விறுவிறுப்பைக் கூட்ட 4 நாள் கொண்ட டெஸ்ட் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தென்னாப்பிரிக்காவும் ஜிம்பாப்வேவும் 4 நாள் போட்டியில் விளையாட சம்மதம் தெரிவித்தன. இதையடுத்து வரும் 26 ஆம் தேதி போர்ட் எலிசபெத்தில் போட்டி நடக்கிறது. இந்த போட்டிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அங்கீகாரம் அளித்துள்ளது. 

இந் நிலையில் 4 நாள் டெஸ்ட் போட்டிக்கு புதிய விதிமுறைகளை ஐ.சி.சி. வகுத்துள்ளது. வழக்கமான 5 நாள் போட்டியில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 90 ஓவர்கள் பந்து வீசப்படும். 4 நாள் போட்டியில் தினமும் 98 ஓவர்கள் வீசப்பட வேண்டும். ஆட்ட நேரம் அரைமணி நேரம் அதிகரிக்கப்படும். இதே போல் 200 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தால்தான் பாலோ-ஆன் கொடுக்க முடியும். 4 நாள் போட்டியில் இது 150 ரன்களாக குறைக்கப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close