தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்ததாக ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம், நேற்று உரையாற்றிய மோடியையும், பேட்டி கொடுத்த அமித்ஷாவையும் கண்டுகொள்ளாதது ஏன்? என மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நேற்றைய தினம் பிரதமர் மோடி உரையாற்றினார். பாஜக தலைவர் அமித்ஷா பேட்டி கொடுத்தார். மத்திய ரயில்வே அமைச்சர் பேட்டி கொடுத்தார். இவர்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திலிருந்து தப்பித்தது எப்படி? எதற்காக ராகுல் காந்திக்கு மட்டும் தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்ப வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “பாஜக தலைவர்களும் பிரதமரும் வாக்குப்பதிவு நாளில் முழு பிரச்சாரம் மேற்கொண்டதை ஊடகவியாளர்கள் தொலைக்காட்சிகள் பார்த்திருப்பீர்கள். முன் எப்போதும் இல்லாத அளவில் பாஜகவும், பிரதமரும் தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளனர். பாஜக தலைவர்கள் விவகாரத்தில் மட்டும் தேர்தல் ஆணையம் தனது பணிகளில் தூங்குகிறது. ஊடகங்கள் அதிகார துஷ்பிரயோகத்தை வெளிக் கொண்டு வரட்டும்” என்று கூறியுள்ளார்.
குஜராத் தேர்தலில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை நேற்று முன்தினம் நிறைவடைந்தது. வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. வாக்குப்பதிவுக்கு முன்னதாக 48 மணி நேரம் பரப்புரை செய்யும் விதமாக பேசவோ, தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கவோ கூடாது. அப்படி செய்தால் அது தேர்தல் ஆணைய விதிகளின் படியும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படியும் குற்றமாகும். நேற்று காங்கிரஸ் தலைவர் குஜராத் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அவரது பேட்டி பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்டது.
ராகுல் காந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தது தொடர்பாக அவரிடம் இருந்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோடீஸ் அனுப்பியுள்ளது. வரும் 18 ஆம் தேதிக்குள் ராகுல் விளக்கமளிக்குமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ராகுல் காந்தியின் பேட்டியை ஒளிபரப்பிய தொலைகாட்சிகள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 126(1)(பி) பிரிவின் கீழ் காவல் நிலையத்தில் வழக்கு தொடருமாறு குஜராத் தேர்தல் ஆணையத்திற்கு, தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது, பிரதமர் மோடி குஜராத்தில் வாக்களித்துவிட்டு பேட்டி கொடுத்ததோடு பாஜகவின் சின்னமான தாமரையை பேட்ச் ஆக தனது சூட்டில் அணிந்து வந்தார். தேர்தல் நடத்தை விதிப்படி இது குற்றம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியவுடன் அவருடைய ஆதரவாளர்கள் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு கேள்வி எழுப்புகின்றனர்.
Loading More post
'கொலையாளிகள் தூக்கிலிடப்படும் வரை பதற்றம் குறையாது' - கன்னையா லாலின் மகன் பேட்டி
டாய்லெட் நீரில் பீர்: ப்பா செம டேஸ்ட்டா இருக்கேனு ருசிக்கும் சிங்கப்பூர் மக்கள்!
முதலில் கூட்டு பாலியல் வன்கொடுமை, பின்பு மதமாற்றம் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!
காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 8 பேர் மீது வழக்கு
இங்கிலாந்துக்கு 'ஷாக்' கொடுத்த ரிஷப் பண்ட், ஜடேஜா - மீண்டது இந்திய அணி
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்