[X] Close

போலீஸிலிருந்து தப்பியோடிய விசாரணை கைதி ரயில் மோதி பலி

Thiruvallur-Youth-Death

 

திருவள்ளூர் அருகே விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் போலீஸிலிருந்து தப்பி ஓடிய போது சரக்கு ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.

வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவரின் மகன் பிரபாகரன், பேருந்தில் தகராறு செய்வதாக கிடைத்த தகவலையடுத்து செவ்வாப்பேட்டை போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். பிரபாகரன் மீது வழக்குப் பதியப் போவதாக கூறியதையடுத்து, ரயில் நிலையம் நோக்கி ஓடிய அவர், சரக்கு ரயில் மோதி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரனின் உறவினர்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். விசாரணையில் ஈடுபட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி உத்திரவாதம் கொடுத்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close