நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்க சென்ற சென்னை காவல் ஆய்வாளர் ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சென்னை கொளத்தூர், லட்சுமிபுரம் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் தங்கம், வெள்ளி என 3.5 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. நகைக்கடையின் மேற்கூரையை துளையிட்டு இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டது. இதனையடுத்து, கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ராஜமங்கலம் போலீசார் 5 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் கொள்ளையர்களை பிடிக்க தமிழக போலீசார் ராஜஸ்தான் விரைந்தனர். அங்கு ராஜஸ்தான் போலீசார் உதவியுடன் கொள்ளையர்கள் குறித்த தகவல்களை பெற்று தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏற்கனவே நாதுராம், தினேஷ் சவுத்ரியின் உறவினர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி சுட்டுக் கொல்லப்பட்டார். கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் படுகாயம் அடைந்துள்ளார். ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து இணை ஆணையர் சந்தோஷ்குமார் தலைமையிலான தமிழக போலீஸ் ராஜஸ்தான் செல்கிறார்கள் என காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்