காணாமல்போன மீனவர்களை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து மீனவ அமைப்புகளையும் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக திமுக செயல் தலைவர மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு ஆதரவாக சென்னையில் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஸ்டாலின், மீனவர்களுக்காக கேரள அரசு செய்ததில் 25 சதவிகித அளவுக்காவது தமிழக அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்லும் மீனவர்களுக்காக வாக்கி டாக்கி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கிடப்பில் போட்டிருப்பதாகவும், திட்டத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல்போன மீனவர்களின் விவரம் குறித்து முதலமைச்சரும், அதிகாரிகளும் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை அளித்துள்ளதாகவும் ஸ்டாலின் விமர்சித்தார். காணாமல்போன மீனவர்களை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து மீனவ அமைப்புகளையும் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட மீனவர்களின் நலனுக்காக நாளை ஆளுநரை சந்திக்க இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
Loading More post
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!