Published : 12,Dec 2017 11:37 AM
சூப்பர் ஸ்டார்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறும் ஜியோ!

ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை
வெளியிட்டுள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களை பெற்றுள்ள ரஜினிகாந்த் தனது 67 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
இதனை நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பலவிதங்களில் கொண்டாடி வருகின்றனர். சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், நண்பர்கள்
என அனைவரும் தங்களுடைய வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதேபோல் நடிகர் தனுஷும் விரைவில் திரைக்கு
வரவிருக்கும் ’காலா’ படத்தின் 2 லுக் போஸ்டரை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், தலைசிறந்த மொபைல் நிறுவனங்களின் ஒன்றான ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை
கொண்டாடும் வகையில் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ’ஹாப்பி ப்ர்த்டே தலைவா’என்ற வாசங்களுடன்
இடம்பெற்றுள்ள அந்த வீடியோ தற்போது ரஜினி ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளது.