[X] Close

ராணுவ வீரர்கள் நலனில் அக்கறை காட்டும் தமிழக அரசுக்கு ஆளுநர் பாராட்டு

TN-governor-praise-tn-government

முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலனில் அக்கறை காட்டும் தமிழக அரசை பாராட்டுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார்.


Advertisement

படைவீரர்களுக்கான கொடி நாள் தினத்தையொட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வானொலியில் உரையாற்றியுள்ளார். அப்போது முழு மனதுடன் தமிழக மக்கள் கொடி நாள் நிதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள ஆளுநர், இந்த ஆண்டும் கொடி நாள் வசூலில் தமிழகம் சாதனை படைக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7 ஆம் தேதி கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது. கடந்த 13 ஆண்டுகளாக மக்கள் தொகை அடிப்படையில் கொடி நாள் வசூலில் தமிழகம் தேசிய அளவில் முதலிடம் வகிக்கிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close