விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சங்கராபரணி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.
வல்லத்தைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பூரணி, தனது பாட்டியுடன் சங்கராபரணி ஆற்றிற்கு துணி துவைக்கச் சென்றிருக்கிறார். அப்போது பூரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அதிக வேகத்துடன் வந்த காட்டாறு வெள்ளத்தால் மாணவி அதிக தூரம் வரை அடித்துச் செல்லப்பட்டார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பூரணியின் பாட்டி கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை அழைத்தார். பின்பு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் சுமார் 2 மணி நேரம் மாணவியை ஆற்றில் தேடினர். அதன் பின்பு மாணவியின் உடல் கரைத்தாண்டி இருக்கும் புதரில் ஒதுங்கி இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. ஆற்றில் இறங்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தும், பொதுமக்கள் அதை மீறுவதால்தான் இதுபோன்ற உயிரிழப்புகள் நேரிடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!