Published : 22,Feb 2017 01:43 AM

கொல்லைப்புற வழியை திமுக விரும்பாது: ஸ்டாலின் பேச்சு

DMK-acting-president-Stalin-Speech

திமுக ஒருபோதும் கொல்லைப்புறம் வழியாக பதவியில் அமர்வதை விரும்பாது என்று அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்றும், அதனையே சட்டப்பேரவையில் திமுக வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்த பின்னர் பல்வேறு உண்மைகளை வெளியிட்ட ஓ.பன்னீர்செல்வம், முதல்வராக இருந்த போது அமைதி காத்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அரசுக்கு எதிராக திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்