[X] Close

இலங்கையைத் தாக்கிய சூறாவளிக்கு 7 பேர் உயிரிழப்பு

Heavy-Rain-in-Srilanka-and-Flood

இலங்கையைத் தாக்கிய சூறாவளிக்கு 7 பேர் உயிரிழந்தனர்‌. ஐந்து மீனவர்களைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது.

இலங்கையில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தலைநகர் கொழும்புவை தாக்கியது. சூறாவளி காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

அசுரத்தனமாக காற்று வீசியதால் மக்கள் அவசர அவசரமாக வீடுகளுக்குத் திரும்பினர். சூறாவளியைத் தொடர்ந்து பலத்த மழையும் பெய்ததால் சில இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்களைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close