ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், களத்தில் திமுக - அதிமுக இடையேதான் பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் கடந்தமுறை போட்டியிட்ட மருதுகணேஷையே மீண்டும் வேட்பாளராக திமுக அறிவித்துள்ளது. கடந்தமுறை அதிமுக அம்மா அணி, புரட்சித் தலைவி அம்மா அணி என இரண்டு அணியாக செயல்பட்டு வேட்பாளர்களை நிறுத்திய அதிமுக, இந்த முறை இரட்டை இலை சின்னத்தில் தேர்தலை சந்திக்கவுள்ளது. அதிமுகவின் வேட்பாளர் நாளை அறிவிக்கப்பட உள்ளார்.
கடந்தமுறை அதிமுக அம்மா அணியின் சார்பில் போட்டியிட்ட டிடிவி தினகரன் தற்போது மீண்டும் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. இசையமைப்பாளர் கங்கை அமரனை வேட்பாளராக களமிறக்கிய பாரதிய ஜனதா கட்சி இந்தமுறையும் ஒரு பிரபலமானவரையே வேட்பாளாராக அறிவிக்கவுள்ளதாக கூறியுள்ளது. மற்றொரு முக்கிய எதிர்க்கட்சியான தேமுதிக இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதில்லை என அறிவித்துள்ளது. அதேபோல தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை எனவும் தெரிவித்துவிட்டது.
கடந்த முறை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற அடையாளத்துடன் தேர்தல் களம் புகுந்த ஜெ.தீபா இந்த முறையும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்பாகவே திமுகவை ஆதரிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்தது. திமுகவுடன் ஏற்கனவே கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும் திமுக வேட்பாளருக்கே ஆதரவு என அறிவித்தது. கடந்த இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என முடிவு செய்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த முறை திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கடந்த முறை வேட்பாளாரை அறிவித்து தேர்தல் களம் கண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதுவரை தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. எவ்வாறாயினும் தேர்தலில் அதிமுக - திமுக இடையேதான் பலத்த போட்டி நிலவும் என கூறப்படுகிறது. தேர்தல் முடிவுக்கு பின்தான் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது தெரியவரும்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்