[X] Close

வேளாண் ஆ‌ராய்ச்சி நிறுவனங்களை மற்ற நிறுவனங்களுடன் இணைக்க கூடாது: ஸ்டாலின்

dont-merge-indian-agri-research-centres-to-other-concerns-said-mk-stalin

தமிழகத்தில் இயங்கி வரும் இந்திய வேளாண் ஆ‌ராய்ச்சி குழும நிறுவனங்களை மற்ற நிறுவனங்களுடன் இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங்குக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் இயங்கும் மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு கழகம், கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம், தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை மற்ற நிறுவனங்களுடன் இணைக்கக் கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கடலோர குடும்பங்கள் நேரடியாகவோ, மறைமுகவாகவோ கடலோர மீன்வளர்ப்பை நம்பியுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, கோவை, திருச்சியில் உள்ள இந்திய வேளாண் ஆ‌ராய்ச்சிக் குழும நிறுவனங்களை மற்ற நிறுவனங்களுடன் இணைக்கும் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கடிதத்தில் கூறியுள்ளார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close