[X] Close

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: திமுகவுக்கு விசிக ஆதரவு

vck-supports-dmk-in-rk-nagar-byelection

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷ்க்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ஆம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுவதாக அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். இந்நிலையில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ்க்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், " ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ்க்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாகவும், கடிதம் வாயிலாகவும் கோரிக்கை விடுத்தார்.  மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று ஆர்.கே.நகரில் திமுகவிற்கு விசிக ஆதரவு தருகிறது" என திருமாவளவன் தெரிவித்தார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close