[X] Close

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: சேவாக் யோசனை

Cricket-needs-to-grow-to-be-an-Olympic-sport--Virender-Sehwag

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற வேண்டும் என்றால் அதிக நாடுகளில் கிரிக்கெட் விளையாடப்பட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் கூறினார்.

சுவிட்சர்லாந்தில் உறைபனி கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கிறது. இதில் முன்னாள் வீரர்கள் சேவாக் , முகமது கைஃப், இலங்கையின் ஜெயவர்த்தனே, பாகிஸ்தானின் சோயிப் அக்தர், நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி உட்பட பலர் விளையாட உள்ளனர். இதற்காக டெல்லியில் நடந்த விழாவில் கலந்துகொண்ட சேவாக், ’உறைபனியில் கிரிக்கெட் விளையாடுவது புதுமையாக இருக்கும் என நினைக்கிறேன். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் சுவிட்சர்லாந்து உறுப்பினராக இல்லை என்றாலும் அங்கு கிரிக்கெட்டை யாராவது முன்னெடுத்தால் சிறப்பானதாக இருக்கும். ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை கொண்டு செல்ல வேண்டுமானால் அதிகமான நாடுகள், கிரிக்கெட்டை விளையாட வேண்டும். ஐசிசி-யில் 105 நாடுகள் உறுப்பினராக இருந்தாலும் நிரந்தர உறுப்பினராக 12 நாடுகள் மட்டுமே உள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்’ என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close