[X] Close

வருமானவரி சோதனை: திருநாவுக்கரசர் கருத்திற்கு ஈவிகேஎஸ் மறுப்பு

EVKS-Elangovan-said-about-IT-Raid

வருமானவரித்துறை ‌சோதனையில் அரசியல் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ள நிலையில், அரசியல் எதுவும் இருப்பதாக தெரியவில்லை என மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.


Advertisement

சசிகலா குடும்பத்தினரின் வீடுகள் மற்றும் அலுவலங்களில் 5 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த வருமான வரித்துறை சோதனையில் உள்நோக்கம் இருப்பதாகவும், இது மத்திய அரசின் அத்துமீறல் என்று பல அரசியல் தலைவர்களும் தெரிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் திருநாவுக்கரசர் வருமான வரித்துறையினரின் சோதனையில் அரசியல் இருப்பதாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் சசிகலா குடும்பத்தினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டதில் எந்தவித அரசியலுல் இருப்பதாக தெரியவில்லை என காங்கிரஸ் முன்னாள் மாநிலத்தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் கருத்து மோதல் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close