Published : 13,Nov 2017 02:53 AM
மணிப்பூரில் குண்டுவெடிப்பு: 2 பாதுகாப்பு படை வீரர்கள் பலி

மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.
சந்தல் மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சக்தி வாய்ந்த IED வகை குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் பாதுகாப்பு படையினர் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி இதேபோன்ற சம்பவம் நடைபெற்றது. அப்போது, ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். கடந்த சில மாதங்களாக மணிப்பூரில் இதுபோன்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.