Published : 09,Nov 2017 08:46 AM

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி

karthi-s-new-movie-pooja

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி புதியதாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இன்று சென்னையில் இப்படத்திற்கான பூஜை நடைப்பெற்றது. அதில் சத்யராஜ், சிவகுமார், சூர்யா, மெளனிகா, பானுப்ரியா, கார்த்தி, இயக்குநர் பாண்டிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இது முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக இருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து விளக்கம் தரப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிக்க உள்ள மற்ற நட்சத்திரங்களின் பட்டியல் பிறகு வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளது. கார்த்தி நடிப்பில் 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதால் அடுத்து  இந்தப் படத்தின் படப்பிடிப்பு உடனடியாக தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஏற்கெனவே பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'பசங்க2' படத்தை சூர்யாவின் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்