[X] Close

கோடநாடு காவலாளி கொலை வழக்கு: 5 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து

Kodanad-security-murder-case--Goondas-Act-cancelled-on-5

கோடநாடு காவலாளி கொலை வழக்கில், 5 பேர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இங்கு காவலாளியாக பணியாற்றிய ஓம் பகதூர் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பரிந்துரையின்பேரில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்நிலையில் 5 பேரின் உறவினர்கள் தொடர்ந்த வழக்கில், உதயன், தீபு, சதீஷன், மனோஜ், பிஜின் ஆகிய 5 பேர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. குண்டர் சட்டத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட மனு மீது குறிப்பிட்ட காலத்திற்குள் ஆட்சியர் நடவடிக்கை எடுக்காததால் குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close