Published : 23,Oct 2017 05:55 AM

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு

Four-People-try-to-suicide-in-Nellai-collector-office

நெல்லையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஆட்சியர் அலுவலத்தில் தீக்குளித்த பரிதாப சம்பவம் அரங்கேறியுள்ளது. படுகாயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் குறைகள் குறித்து புகார் கொடுக்க ஏராளமானோர் வந்திருந்தனர். அப்போது திடீரென 4 பேர் யாரும் எதிர்பாராதவிதமாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தனர். இதனால் அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைக்க முயற்சித்தனர். தீக்குளித்தவர்கள் நெல்லை மாவட்டம் காசிதர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து-சுப்புலட்சுமி தம்பதி, அவர்களின் இரண்டு குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது.

தீக்குளித்தவர்கள் 4 பேரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இசக்கிமுத்து கந்துவட்டி பிரச்னையால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் இதனால் மனமுடைந்து 4 பேரும் தீக்குளித்ததாகவும் கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்ததால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்