Published : 19,Oct 2017 12:06 PM
தமிழர்கள் மீதான தாக்குதலை ஏன் தமிழிசை கண்டிக்கவில்லை?: நெட்டிசன்கள் கேள்வி

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பாக இடம் பெற்றுள்ள காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று தமிழக பாஜகவின் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியிருந்தார். அதற்காக விஜய்யின் ரசிகர்கள் பலர் தமிழிசை மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். அதே போல் விஜய் மீதும் சிலர் விமர்சனங்களை பதிலுக்கு முன் வைத்து வருகிறார்கள்.
மெர்சல் படம் வெளி வருவதற்கு முன்பு பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்தது. அப்படம் வெளியான பிறகும் சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. இப்படத்தில் விஜய் பேசியுள்ள ஜிஎஸ்டி மற்றும் மருத்துவத்துறை குறித்தான வசனங்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளன. ட்விட்டரில் மால்முருகன் கிருஷ் என்பவர், இவ்வளவு வரி வாங்கிட்டு இலவச மருத்துவம் தரலையேனு சொன்னா அதை சரி செய்ய முயல்வது தானே அரசின் கடமை. அதை தவிர்த்து காட்சியை நீக்க சொல்வது கேவலம் என்று குறிப்பிட்டுள்ளார். மெர்சல் சுந்தர் என்பவர் நீங்க ஜிஎஸ்டியை கேன்சல் பண்ணுங்க. காட்சியை அவங்க நீக்குவாங்க என குறிப்பிடுள்ளார்.
அதே போல் படத்தில், மிக்சி, கிரைண்டர் இலவசாக அரசு தரும் போது கல்வியையும், மருத்துவத்தையும் ஏன் இலவசமாக தரக்கூடாது?’ என்று விஜய் பேசியுள்ள வசனம் பற்றி நெட்டிசன் ஒருவர் ‘இரண்டு நாளைக்கு முன்னாள் எடப்பாடியை சந்தித்தீர்களே அப்போது இதை நேரிலேயே கேட்டிருக்கலாமே?’என்று விஜய்யை விமர்சித்திருக்கிறார். அசோக் என்பவர் கர்நாடகாவில் விஜய் படம் பார்க்க வந்த தமிழர்களை தாக்கினார்களே அதை ஏன் தமிழிசை கண்டிக்கவில்லை என கேட்டிருக்கிறார். இப்படி வகை வகையாக வெளியாகியுள்ள நெட்டிசன்கள் கருத்துக்கள் இதோ: