[X] Close

2-வது பயிற்சி ஆட்டம்: 3 விக்கெட்டை இழந்தது நியூசி.!

New-Zealand-loses-3-wickets-against-India-BP-XI

இந்திய கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சி கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டை இழந்துள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி 20 போட்டிகளில் பங்கேற்கிறது. முதலாவது ஒரு நாள் போட்டி, வரும் 22 ஆம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது.
முன்னதாக, நியூசிலாந்து அணி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிரான இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து தோற்றது. இரண்டாவது பயிற்சி ஆட்டம் இன்று நடந்துவருகிறது. மும்பையில் நடக்கும் இந்தப் போட்டியில் நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தொடங்கியது.
அந்த அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களான குப்தில், 32 ரன்களிலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான முன்ரோ 26 ரன்களிலும் கேட்ச் ஆயினர். கேப்டன் வில்லியம்சன் ஒரு ரன்னில் போல்டானார். 20 ஓவர் முடிவில் அந்த அணி 112 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்திருந்தது. ரோஸ் டெய்லரும் (37 ரன்கள்) லாதமும் (11ரன்) ஆடிக்கொண்டிருக்கின்றனர்.  கரண் சர்மா 2 விக்கெட்டும் உனட்கட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 
 


Advertisement

Advertisement
[X] Close