[X] Close

ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு: திமுக கேவியட் மனு தாக்கல்

dmk-filed-new-petition-in-SC

பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி, திமுக கொறடா சக்கரபாணியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ செம்மலை மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. அவ்வாறு மனு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் இந்த வழக்கில் தங்களை ஆலோசிக்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது எ‌ன‌ திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close