நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘சக்தி’ திரைப்படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஒரு பக்கம் சினிமா. இன்னொரு பக்கம் லைவ் டான்ஸ் ஷோ என்று இரண்டு பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை வரட்சுமி. பாலாவின் இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டையில் இவரது நடிப்பு அதிகம் கவனிப்புக்குள்ளானது. அதனை தொடர்ந்து விஜய்சேதுபதி-மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதாவில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது அறிமுக இயக்குநர் பிரியதர்ஷினி இயக்கும் சக்தி என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான ஃபஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.
வரலட்சுமியை மையப்படுத்தியே இப்படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே சக்தி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் வெளிவருகிறது. இந்த மூன்று மொழிகளுக்கும் உண்டான மூன்று விதமான போஸ்டர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இப்படத்தின் இயக்குநர் பிரியதர்ஷினி, மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். இந்த ஃபஸ்ட் லுக் போஸ்டரை வரலட்சுமியின் தந்தை சரத்குமார் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்