Published : 17,Mar 2023 11:29 AM
”ஒருமுறை நீங்கள் தங்கக் கடத்தலில் சிக்கிவிட்டால் அவ்ளோதான்”-IRS அதிகாரி கொடுத்த ஷாக் தகவல்

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 1317 கிலோ தங்கம் கடத்தப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்ககடத்திலில் ஈடுபடுவோருக்கான தண்டனை விவரங்கள் குறித்து முன்னால் IRS அதிகார சரவணக்குமாருடன் புதிய தலைமுறை செய்தியாளார் நடத்திய கலந்துரையாடல் பின்வருமாறு.
- தங்ககடத்ததில் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது 1317 கொலோ தங்க கடத்ததில் ஈடுபட்டுள்ளனர். இதில் தனி நபர் அதிகளவில் ஈடுபடுவதாக சமீப காலத்தில் பார்த்து வருகிறோம். இவ்வாறு ஈடுபடுபவர்களின் எதிர் காலம் எனவாகும்?
”தங்க கடத்தலில் ஈடு படுபவர்களுக்கு 3 வருடங்கள் தண்டனை உண்டு. அதே சமயம் இத்தொழிலுக்கு அவர்கள் வந்து விட்டார்கள் என்றால் அதில் இருந்து வெளிவர விரும்பமாட்டார்கள்”.
- இது போல் கடத்தலில் ஈடுபடுவோரின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
”3 ஆண்டுகள் தண்டனை என்ற நிலையையும் தாண்டி அவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் போய்விடும். அவர்கள் இந்தியாவை விட்டு செல்ல இயலாது. அதே சமயம் இந்தியாவிலும் அவர்களுக்கான வேலைவாய்ப்பு என்பது கேள்விகுறியாகி விடும்.”
- இதை முழுமையாக தடுப்பதற்கு மத்திய மாநில அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கும்?
”தங்கத்தின் மீது பற்றாக்குறை என்பது இந்தியாவை பொருத்த வரையில் அதிகம் தேவை தான். இதனால் தங்க கடத்தலில் அதிக அளவு இலாபம் கிடைப்பதால் இத்தொழிலை அவர்கள் மேற்கொள்ளதான் செய்வார்கள். அதனால் customs மற்றும் காவல் துறையில் ஒரு விழிப்புணர்வு கொண்டு வரவேண்டும். பொதுவாக கடத்தலுக்கு, கிராமத்தில் இருக்கும் இளைஞர்களையும், ஏழ்மை நிலையில் இருக்கும் இளைஞர்களையும் தேர்ந்தெடுத்து தான் இவர்கள் கடத்தலில் ஈடுபடுகின்றனர். அதனால் இத்தகைய இளைஞர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் .” என்றார்.
இது குறித்து விரிவாக காண கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்க