Published : 07,Mar 2023 10:36 AM

சென்னையில் தனியார் பேருந்து - அரசின் முடிவை எதிர்த்து தொழிற்சங்கங்கள் கடிதம்

Private-bus-in-Chennai---Industry-associations-letter-against-Govt--s-decision

சென்னையில் 500 தனியார் பேருந்துகள் இயக்கும் அரசாணை வெளியீடு முடிவை கைவிட வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து தொ.மு.ச தொழிற்சங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினர்.


சென்னையில் சில வழித்தடத்தில் 500 தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதை ஆரம்பத்தில் இருந்து தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

image

இந்த நிலையில் தொ.மு.ச, சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூட்டாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருக்கின்றனர். அதில்
ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகள் இயக்கும் முடிவை முற்றிலுமாக திரும்ப பெற வேண்டும். ஏற்கனவே கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தான் பேருந்துகள் நாட்டுடமையாக்கப்பட்டன. எனவே இந்த முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர்.

image

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடினமான நேரத்தில் ஊதிய பலன்கள் விட்டுக் கொடுத்து தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்தந்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். அதேபோல்
ஒட்டுனர்,நடந்தனர், தொழில்நுட்ப பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர். இதில்
சி.ஐ.டி.யூ மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி, ஐ.என்.டி.யூ.சி உள்ளிட்ட 9 தொழிற்சங்க கட்டமைப்பு கூட்டாக கடிதம் எழுதி இருக்கின்றனர். விரைவில் முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்த இருக்கின்றனர்.