Published : 29,Sep 2017 08:13 AM

பொய் வழக்கு: நெல்லை, மதுரையில் பத்திரிகையாளர்கள் போராட்டம்

Nellai-Journalist-Protest

ஊடக ‌ஜனநாயகம் மீதான காவல்துறையினரின் அடக்குமுறையைக் கண்டித்து நெல்லை, மதுரை உள்ளிட்ட இடங்களில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை மகேந்திரகிரி அருகே பயங்கர சத்தத்துடன் புகைவந்தது தொடர்பாக செய்தி வெளியிட்டதால், பத்திரிகையாளர்கள் மூவர் மீது பணகுடி காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பத்திரிகையாளர்கள் ஜனநாயக கடமையை ஆற்றவிடாமல் தடுக்கும் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட பத்திரியாளர்கள் 150க்கும் மேற்பட்டோர், பாளையங்கோட்டையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். இதேபோல், மதுரையிலும் தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் நெல்லை காவல்துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் மீதான பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தென்மண்டல காவல்துறை தலைவர் சைலேஷ் குமார் யாதவிடம் மனு அளிக்கப்பட்டது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்