[X] Close

தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு

Tamilnadu-met-rain

தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


Advertisement

வடக்கு உள் தமிழகம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன்  காரணமாக வடக்கு உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தர்மபுரியில் 8 செ.மீ, ஒகேனக்கலில் 7 செ.மீ, மதுரை திருமங்கலத்தில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இதேபோன்று காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் மேட்டூருக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து 8,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 14,774 கன அடியிலிருந்து 21,648 கன அடியாக அதிகரித்துள்ளது.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close