Published : 13,Jan 2023 07:38 PM

"நாங்களே மனவேதனையில் இருக்கோம்” - முன்னாள் எம்பி மஸ்தானின் தம்பி மனைவி புகார்!

masthan-murder-case

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கொலை செய்யப்பட்ட முன்னாள் எம்பி மஸ்தானின் தம்பி மனைவி ஜீனத் போகம் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் மரணம் மிகப்பெரிய பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியது. மஸ்தான் முதலில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக தகவல் பரவியது. இதில் சந்தேகமடைந்த அவரது மனைவி மற்றும் மகன், மஸ்தான் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரை பெற்றுகொண்ட கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணையை தொடங்கினார்.

image

விசாரணையில் மஸ்தான் தம்பி ஆசம் பாஷாவின் மருமகன் இம்ரான், தமீம், நசீர், தலகீத் அஹ்மது, லோகிஷ்வரன் ஆகியோரை கைது செய்து விசாரணையை போலீசார் மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் மஸ்தான் தம்பியின் மருமகன் இம்ரான் மஸ்தானிடம் 15 லட்சம் ரூபாய் கடனாக வங்கி உள்ளதும், அந்த பணத்தை திரும்பி மஸ்தான் கேட்டபோது இம்ரான் தனது நண்பர்களை வைத்து கொலை செய்து விட்டதாகவும் முதல் கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்தநிலையில், நேற்று மஸ்தான் தம்பி ஆசம் பாஷாவை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று சொத்துக்காக மருமகனுடன் சேர்ந்து கொலை செய்துவிட்ட புகாரில் கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்துள்ளனர்.

image

இந்த நிலையில் மஸ்தான் தம்பி மனைவி ஜீனத் போகம், ”மஸ்தான் மரணத்திற்கும் எனது கனவருக்கும் எந்த தொடர்பும் இல்லை; ஏற்கனவே மிக வேதனையில் இருகிறோம். மஸ்தான் அவர்களுக்கும் எனது கணவருக்கும் எந்த தகராறும் இல்லை. புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணை மேற்கொள்ளாமல், கைது செய்கின்றனர்” என்ற குற்றசாட்டை முன் வைத்தார். ”மஸ்தான் மரணதில் முழுமையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். மஸ்தான் கொலை வழக்கை சிபிசிஐடி மாற்றி விசாரணை செய்யவேண்டும்” என்றும் தமிழ்நாடு காவலத்துறை தலைமை அலுவலகதில் அளித்துள்ள புகாரில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

image

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்