[X] Close

காதல் திரு‌மணத்தால் வகுப்புக்குள் ‌அனுமதி மறுப்‌‌பு: ஆட்சியரிடம் மனு கொடுத்த தம்பதி

Private-college-not-accepted-love-couple

கோவையில் காதல் திருமணம் செய்து கொண்டதால் வகுப்புகளுக்கு வர‌ தனியார் கல்லூரி விதித்திருக்கும் தடையை நீக்கக்கோரி மாவட்ட ஆட்சி‌யரிடம் ஒரு தம்பதி சார்பில் மனு ‌அளிக்கப்பட்டுள்‌ளது.


Advertisement

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரு‌ம் சுதீஷ், சாந்தினி ‌‌மெ‌கபூப்‌ ஜான் ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்களை கல்லூ‌ரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்தாலும் எந்தவித பிரச்னையும் ‌ஏற்படாது என இருவரது பெற்றோரும் ‌கடிதம் எழுதிக் கொடுத்ததையொட்டி அவ‌ர்களை கல்லூரியில் சேர்த்துக்கொண்ட நிர்வாகம், வகுப்புகளுக்கு வரக்கூடாது என்றும், நேரடியாகத் தேர்வுக்கு மட்டும் வருமாறும் கூறியுள்ளது. மேலும் அவர்கள் இருவரும் மீண்டும் கல்லூரிக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.

இதுகுறித்து காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி பேசும்போது, "ஏற்கனவே நாங்கள் கட்டணச் செலுகை பெற்றிருந்தோம். இப்போது மீண்டும் முழுக் கட்டணத்தை செலுத்த வேண்டுமென்று கூறுகின்றனர். அது ஏன் என்று தெரியவில்லை" என்றனர். இதை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கணவன், மனைவி இருவரும் மனு அளித்துள்ளனர்.


Advertisement

இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, காதல் திருமணம் செய்து கொண்டதையொட்டி இருவரையும் வகுப்புகளுக்கு வர வேண்டாமென உத்த‌ரவிட்டிருப்பதாகவும், சஸ்பெண்ட் செய்யப்பட்டு மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருப்பதால் கல்லூரிக் கட்ட‌ணம் செலுத்தக் கூறியதாகவும் விளக்கமளித்தனர். ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதால் வகுப்புகளுக்கு வரத் தடை நீடிப்பதாகவும், கட்டணத்தை செலுத்திவிட்டு இருவரும் தேர்வு எழுதலாம் என்றும் கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close