Published : 04,Jan 2023 11:42 AM

வாரிசு, துணிவுக்காக காத்திருக்கும் விஜய், அஜித் ரசிகர்களுக்கு அதிரடி சர்ப்ரைஸ்!

vijay-ajith-starrer-rajavin-parvaiyile-to-be-re-released-in-tamilnadu-by-this-week

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் ரிலீசாக இருக்கிறது. இதற்கு முன்னதாக விஜய்யின் ஜில்லாவும், அஜித்தின் வீரமும் ஒரே நாளில் வெளியான நிலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன.
இதனாலேயே இரு தரப்பு ரசிகர்களும் அதீத ஆவலில் காத்திருக்கிறார்கள்.

அண்மையில்தான் அஜித்தின் துணிவு பட ட்ரெய்லர் வெளியாகி வெறும் 24 மணிநேரத்திலேயே 40 மில்லியன் வியூஸை பெற்று சாதனை படைத்தது. இன்று விஜய்யின் வாரிசு பட ட்ரெய்லர் மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. இதனால் குதூகலத்தில் இருந்து வந்த ரசிகர்களின் உற்சாகத்திற்கு மேலும் தீனி போடுவது வந்திருக்கும் செய்திதான் தற்போது சமூக வலைதளங்களில் டாப் ஹிட்டாக இருக்கிறது.

அதாவது விஜய்யும் அஜித்தும் இணைந்து முதலும் கடைசியுமாக நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தை வாரிசு , துணிவு வெளியாவதை முன்னிட்டு தமிழ்நாட்டின் சில தியேட்டர்களில் இந்த வாரம் ரீ-ரிலீஸ் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதுபோக அதற்கான டிக்கெட் முன்பதிவு வேலைகளும் தொடங்கியிருக்கின்றன.

இதனையடுத்து ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் #RajavinParvaiyile என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. 1995ம் ஆண்டு விஜய், அஜித், இந்திரஜா மற்றும் வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படத்தை ஜானகி சவுந்த இயக்க இளையராஜா இசையமைத்திருந்தார். வாரிசு, துணிவு படங்களின் ரிலீசால் எதிரும் புதிருமாக சமூக வலைதளங்களில் கருத்து மோதலில் விஜய் - அஜித் ரசிகர்கள் போரிட்டு கொண்டிருக்க, அவர்களை ஒரு புள்ளியில் இணைக்கும் விதமாக ராஜாவின் பார்வையிலேயே ரீ-ரிலீஸ் செய்தி வெளியாகியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்