Published : 03,Jan 2023 05:33 PM
விஜய்யின் ‘வாரிசு’ ட்ரெய்லர் எப்போது, எங்கே வெளியீடு?.. ரன்னிங் டைம், சென்சார் தகவல்கள்!

விஜய்யின் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த ‘வாரிசு’ திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில், விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 12-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த மாதம் மிகப் பிரம்மாண்டமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிலையில், இந்த விழாவின் தொகுப்பு நேற்று முன்தினம் தனியார் சேனல் ஒன்றிலும் வெளியானது. இதனைத் தொடர்ந்து படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியிடப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், நாளை மாலை 5 மணிக்கு தனியார் சேனலில் யூட்யூப் தளத்தில் வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
#VaaThalaivaa it’s time for #VarisuTrailer
Releasing Tomorrow at 5 PM on @SunTV YouTube channel
See ‘U’ soon nanba #VarisuGetsCleanU#Thalapathy@actorvijay sir @directorvamshi@MusicThaman@iamRashmika@7screenstudio@TSeries#Varisu#VarisuPongalpic.twitter.com/OAm0gBhV48
மேலும், இந்தப் படத்தை அனைவரும் பார்க்கும் வகையில் யு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 2 மணிநேரம் 49 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளது. யூட்யூப் தளத்தில் வெளியான 24 மணிநேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களும், 2.2 மில்லியன் லைக்குகளும் ‘பீஸ்ட்’ படத்தின் ட்ரெய்லருக்கு கிடைத்தநிலையில், அதனைவிட அதிக பார்வையாளர்களை ‘வாரிசு’ படத்தின் ட்ரெய்லருக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.