[X] Close

காவலாளியை தாக்கி ரூ. 2 கோடி இயந்திரம் கொள்ளை: அனல்மின் நிலையத்தில் பயங்கரம்

thermal-power-station

ஆந்திர மாநிலம் அம்மகுண்டாவில் உள்ள அனல்மின் நிலையத்தில், காவலாளியை தாக்கி 2 கோடி மதிப்பிலான இயந்திரங்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

சமீபகாலமாக மூடப்பட்டுள்ள அந்த அனல் மின் நிலையத்தில், இயந்திரங்களும் உதிரி பாகங்களும் வைக்கப்பட்டிருந்தன. திடீரென அங்கு புகுந்த 30க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள், 3 காவலாளிகளையும் கட்டிப் போட்டு மின் உற்பத்தி இயந்திரங்களை திருடிச் சென்றுள்ளனர். தகவலறிந்து சென்ற போலீஸார் தாக்குதலுக்கு ஆளான காவலாளிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அனல்மின் நிலையத்தில் முக்கிய இயந்திரங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close