Published : 13,Dec 2022 04:55 PM

புதுவை: பேருந்தில் சிறுமியை வைத்து திருட்டில் ஈடுபடும் பெண்கள்! வெளியான அதிர்ச்சி வீடியோ

Puducherry--Women-who-keep-the-girl-in-the-running-bus-are-involved-in-serial-theft-

புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் ஒடும் பஸ்சில் சிறுமியை வைத்து கொண்டு தொடர் திருட்டில் ஈடுப்பட்டு வரும் இரண்டு பெண்கள் குறித்தான சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியீட்டு அவர்களை தேடி வருகின்றனர்.

புதுச்சேரி ஆலங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி. இவர் கடந்த வாரம் ரெட்டியார்பாளையத்தில் இருந்து புதுச்சேரி நகரப்பகுதிக்கு பஸ்சில் வந்து இறங்கியபோது அவரது கைப்பை மாயமாகி இருந்தது. அடுத்த சில நிமிடங்களில் அவரது செல்போஃன்க்கு தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.20 ஆயிரம் எடுக்கப்பட்டதாக வந்த தகவலை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இது தொடர்பாக ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

image

இந்நிலையில், அவரளித்த புகாரின் பேரில் போலீசார் ஏடிஎம் அமைந்துள்ள லால் பகதூர் சாஸ்திரி வீதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இரண்டு பெண்கள் ஒரு கை குழந்தையுடன் நடந்து செல்வதும், அவர்கள் தான் கஸ்தூரி உடன் பேருந்தில் பயணம் செய்ததும் உறுதியானது. பின்னர் புதுச்சேரி போலீசார் இவர்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகளை தமிழக பகுதியான விழுப்புர மாவட்ட போலீசார்க்கு அனுப்பியபோது, இவர்கள் கடந்த 4 ஆம் தேதி திண்டிவனத்தில் ஒடும் பேருந்தில் சிறுமி மூலமாக உடன் பயணிப்பவரின் கைப்பையை திறக்க வைத்து, அதிலிருந்து 25 சவரன் தங்க நகைகளை திருடி சென்றதும் இதே போல் புதுச்சேரியில் வேறு சில இடங்களிலும் பேருந்தில் இந்த பெண்கள் திருட்டில் ஈடுப்பட்டிருப்பது தெரியவந்தது.

image

இதனைத் தொடர்நது கிடைத்த சிசிடிவி காட்சிகளை கொண்டு இரு மாநில போலீசாரும் பஸ்சில் தொடர் திருட்டில் ஈடுப்பட்டு வரும் இரண்டு பெண்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

image

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்