Published : 06,Dec 2022 09:14 AM
அமெரிக்காவின் கோவிட் நிவாரண நிதிகளை திருடினார்களா சீன ஹேக்கர்கள்!?

உலகை புரட்டி போட்ட கோவிட் தொற்றின் தொடக்க புள்ளியாக கருதப்படும் சீனா மீண்டும் கோவிட் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடி, மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் போன்றவற்றை கையாள முடியாமல் திணறி வருகிறது. இதனால், சீனாவின் உள்நாட்டு உற்பத்திகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் கோவிட் நிவாரணங்களை திருடியதாக மற்மொரு சிக்கலில் சிக்கியுள்ளது சீனா! இதனால் உலக நாடுகளின் அதிருப்திகளை எதிர்கொண்டுள்ளது.
சீன அரசாங்கத்தின் உதவியுடன் சீன ஹேக்கர்கள் குழு 2020ம் ஆண்டு முதல் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க கோவிட் நிவாரணங்களை திருடி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தியை என்பிசி செய்தி அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து என்பிசி நியூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சீன ஹேக்கிங் குழுவான APT41 அல்லது வின்டி என்று சிறந்த சைபர் கிரைம் பிரிவாக அறியப்படுகிறது. இது சீன அரசாங்கத்தின் முழு ஆதரவு பெற்ற இந்த குழுவானது அமெரிக்கா பைசர் ஊடுருவல்கள் மற்றும் நிதி தொடர்பான தரவு மீறல்களை நடத்தியுள்ளது என ரகசிய பைசர் கிரைம் நிபுணர்கள் கூறுயுள்ளனர். ஆனால் இதுகுறித்த விரிவான தகவல்களை அவர்கள் வெளியிட மறுத்துவிட்டனர்.
சீன ஹேக்கர்கள் மில்லியன் கணக்கான மதிப்புள்ள அமெரிக்க கோவிட் நிவாரணப் பணத்தை திருடியதாக இரகசிய சேவை அறிக்கை கூறுகிறள்ளது. மென்பொருள் மேம்பாட்டு நிறுவனங்கள், தொலைத்தொடர்பு வழங்குநர்கள், சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் வீடியோ கேம் உருவாக்குநர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை உளவு பார்த்ததற்காக இந்த ஹேக்கிங் குழுவின் பல உறுப்பினர்கள் 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் அமெரிக்க நீதித்துறையால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
இந்த ஹேக்கிங் குழுவானது சீனாவிற்கு வெளியே உள்ள கணினிகளைத் தாக்கி, சீனாவுக்கு உதவும் வகையில் அறிவுசார் சொத்துகளைத் திருடி வருகிறது. இந்த சைபர் குற்றவாளிகள் சீனாவைப் பாதுகாப்பாக மாற்றுவதற்கு சீன அரசாங்கத்தின் உதவியுடன் மாற்று பாதையை தேர்வு செய்துள்ளனர் ‘’ என்று முன்னாள் துணை அட்டர்னி ஜெனரல் ஜெஃப்ரி ரோசன் அப்போது கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்களுக்கு வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் இதுவரை கருத்துதெரிவிக்காதது, குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.