Published : 30,Nov 2022 08:14 AM

``தமிழகம் அமைதியாக இருக்கிறதே என்று அவர்களுக்கெல்லாம் வயிறு எரிகிறது!”- முதல்வர் ஸ்டாலின்

cm-stalin-speech-at-perambalur-and-slams-on-admk-minister

“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க சிலர் சதி செய்கின்றனர்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று அரியலூரில் நடைபெற்ற விழாவில் 32 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 78 கோடி ரூபாய் மதிப்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “கலிங்க சிற்பங்கள், மாளிகை மேடு என எங்கு திரும்பினாலும் தொல்லியல் பொக்கிஷங்கள் மற்றும் கனிம வளங்களும் அரியலூரில் நிறைந்துள்ளது.

image

அரியலூர் போன்றே பெரம்பலூர் மாவட்டத்திலும் வரலாற்று சிறப்புமிக்க அம்சங்கள் உள்ளது. எனவே அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் புதை படிம பூங்கா அமைக்கப்படும். அதேபோல், கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

மக்கள் நலன் ஒன்றையே சிந்தையில் கொண்டு திமுக அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்கலாமா என சிலர் சதி செய்கின்றனர். தமிழகம் அமைதியாக இருக்கிறதே என்று வயிறு எரிகிறது அ வர்களுக்கு எல்லாம். தனது கையில் அதிகாரம் இருந்தபோது, கைகட்டி வேடிக்கை பார்த்து தனது கையாலாகாத தனத்தை வெளிப்படுத்தி பத்தாண்டு காலத்தை நாசமாக்கியவர்கள். இன்று அதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து பொய் பேட்டிகள் புகார் அளிக்கிறார்கள். அதையெல்லாம் மக்கள் பார்த்து சிரிக்கிறார்கள்.

10 ஆண்டு காலம் பாழ்படுத்தியதை மீட்டெடுப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. இன்றைக்கு போட்டி போட்டுக் கொண்டு தொழில் நிறுவனங்கள் தமிழகத்திற்கு வருகிறது. ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாக உயர்ந்து நிற்கிறோம். அனைத்து துறைகளிலும் முன்னேற்ற பாதைக்கு நாம் போய்க்கொண்டு இருக்கிறோம்.

image

பதவி நிலைக்குமா என்ற பயத்தில் ‘ஆபத்து, ஆபத்து’ என்கின்றனர். விமர்சனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். விமர்சனங்களை வரவேற்கிறோம். விஷமத்தனம் கூடாது. ஆட்சியில் இருந்தபோது எதையும் செய்யாமல் இப்போது விமர்சிக்கின்றனர்” என்றார்

முதல்வரின் பேச்சை காணொளி வடிவில் காண:

இதையும் படியுங்கள் - IND vs NZ: இந்தியா முதலில் பேட்டிங் - கருணை காட்டுமா மழை?