Published : 18,Nov 2022 06:56 PM

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள்- வெளியானது மேக்கிங் கிளிம்ப்ஸ்!

Here-s-a-glimpse-of-Superstar-rajinikanth--from-the-sets-of-Jailer

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோவை, படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகி வருகிறது ‘ஜெயிலர்’ திரைப்படம். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, நெல்சன் திலீப்குமார் தனது 4-வது படமாக இயக்கி வருகிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

image

அடுத்தாண்டு வெளியாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார் நடித்தக் காட்சியின் புகைப்படம் நேற்று வெளியான நிலையில், இன்று அதிரடியாக மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ‘ஜெயிலர்’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளால் ரஜினிகாந்தின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்