[X] Close

பேரறிவாளனுக்கு பரோல்...மகிழ்ச்சியாக இருக்கிறேன்: அற்புதம்மாள்

Arputhammal-about-Perarivalan-Parole

பேரறிவாளன் பரோலுக்காக குரல் கொடுத்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வேண்டியது அவசியம் என அவரின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


Advertisement

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு, பரோலில் வெளிவந்துள்ள பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை தமிழக அரசு நீட்டித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாத‌ இறுதியில் பரோலில் வெளிவந்த பேரறிவாளனின் விடுப்பு காலம் நாளையுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், மேலும் ஒரு மாத காலம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் " ஒரு மாதம் பரோலில் இருந்த என் மகன் தொடர்ந்து இன்னொரு மாதம் என்னுடன் இருக்கும் அளவிற்கு பரோல் கொடுத்த தமிழக அரசிற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டத்துறை அமைச்சர், வணிக வரித்துறை அமைச்சர், எல்லோரும் தொடர்ந்து இதற்காக குரல் கொடுத்தனர். இதற்காக குரல் கொடுத்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வேண்டியது அவசியம். மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்றார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close