[X] Close

ஆசிரியை திட்டியதால் 10 வயது மாணவன் தற்கொலை

Up-5th-standard-suicide

உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியை திட்டியதால் 10 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

உத்தரபிரதேச மாநிலம் கோரக்‍பூர் பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுவனை ஆரிசியர் திட்டி அடித்துள்ளார். சக மாணவர்கள் முன் ஆசிரியர் அடித்ததால் மனமுடைந்த மாணவன், தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், மாணவனின் வகுப்பாசிரியர், பள்ளி நிர்வாகம் மீது வழக்‍கு பதிவு செய்துள்ளனர். இதேபோல் மற்றொரு சம்பவம் நடைபெறாமல் இருக்க, காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இறந்த சிறுவனின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார். 


Advertisement

Advertisement
[X] Close