Published : 28,Oct 2022 08:20 AM

வேலைக்கு வராத விசைப்படகு ஓட்டுனர்: வீடு புகுந்து தாக்கிய திமுக பிரமுகர் - வைரல் வீடியோ

driver-not-showing-up-for-work-DMK-leader-attacked-by-house-viral-video

கன்னியாகுமரியில் விசைப்படகு ஓட்டுனரை வீடு புகுந்து திமுக பிரமுகர் தாக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.

கன்னியாகுமரி ஹைகிறவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் சகாய வினோ. இவர், கன்னியாகுமரி வடக்கு தெருவைச் சேர்ந்த திமுக ஒன்றிய பிரதிநிதி இன்பம் என்பவரது விசைப் படகில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை பொறுத்தவரை விசைப்படகில் பணிபுரியும் வேலை ஆட்கள் மற்றும் டிரைவர்களுக்கு படகின் உரிமையாளர்கள் முன்பணம் அளித்து தங்களது படகில் பணி வழங்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

image

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலுக்குச் சென்றபோது படகு நிலைதடுமாறி ஏற்பட்ட விபத்தில் சகாய வினோவிற்கு முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்து தொடர்ந்து இன்பத்தின் படகின் ஓட்டுநராக பணி செய்து வந்துள்ளார். இதையடுத்து சகாய வினோவின் முதுகு தண்டு மேலும் பலவீனமடைந்த காரணத்தால் மேல் சிகிச்சை செய்ததால் கடந்த 2 வாரங்களாக இன்பத்திடம் வேலைக்குச் செல்லவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த இன்பம், தான் வழங்கிய முன் பணத்தை கேட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சகாய வினோவின் வீட்டிற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று தகராறு செய்துள்ளார். அப்போது திமுக பிரமுகர் இன்பம் சகாய வினோ மற்றும் அவரது மனைவி லின்சியை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த சகாய வினோ ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

image

இதுகுறித்து சகாய வினோ, கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இன்பம் கன்னியாகுமரி பகுதியில் முக்கிய திமுக புள்ளி என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் தன்னை மிரட்டுவதாகவும் இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்