மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடைசியாக பொதுநிகழ்ச்சியில் பங்கேற்று, ஓராண்டு நிறைடைந்துள்ளது.
கடந்த ஆண்டு இதேநாளில் தான், சென்னை விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. அதன் பிறகு ஜெயலலிதாவின் நகர்வை பொதுமக்களால் பார்க்க முடியாமல் போனது.
ரயில் சேவையைத் தொடங்கி வைத்த, மறுநாளே உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். பிறகு 74 நாட்கள் கடந்தும், சிகிச்சைப் பலன் அளிக்காமல் மருத்துவமனையிலேயே ஜெயலலிதா உயிழந்தார். கடைசியாக பொதுநிகழ்ச்சியில் பேசியபோதும், சென்னையை அதிநவீன வசதிகள் கொண்ட பெருநகரமாக மாற்ற வேண்டும் என்ற தனது கனவு நனவாகி வருவதாக கூறியிருந்தார் ஜெயலலிதா.
மேலும் பேசிய ஜெயலலிதா, “சென்னை மெட்ரோ ரயில் திட்ட முதல் சேவையின் விரிவாக்கம் மற்றும் இரண்டாவது கட்ட பணிகளுக்கும் ஜப்பான் நிறுவனம் ஆதரவு அளிக்கும் என நம்புகிறேன். மெட்ரோ ரயில் சேவையைப் போன்று, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், சென்னை புறநகர்ப் பகுதிகளை இணைக்கும் சுற்று வட்டப்பாதை திட்டம், முதலீட்டு வளர்ச்சி ஆகிய திட்டங்களுக்கும் உதவி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
Loading More post
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!