Published : 21,Sep 2017 03:09 AM
துப்பாக்கி சுடும் பயிற்சியில் தோனி... வியக்கும் காவல்துறை..!

ஆஸ்திரேலிய அணியுடனான 2-வது ஒருநாள் போட்டிக்கான பயிற்சி தொடர்ந்து இரண்டு நாட்கள் ரத்து ஆனதால் முன்னாள் கேப்டன் தோனி துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார்.
கொல்கத்தாவில் உள்ள காவலர் பயிற்சி மையத்திற்கு சென்ற அவர், துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டார். இலக்கை நோக்கி நேர்த்தியாக சுடும் தோனியின் திறமை வியக்க வைப்பதாக கொல்கத்தா காவல்துறையின் முகநூல் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.