Published : 06,Oct 2022 11:58 AM

துல்லியமாக நடந்த 11 கணிப்புகள் - கவனம் ஈர்க்கும் 19 வயது ஜோசிய பெண்

19-year-old-woman-Hannah-Carroll-predicts-future-like-Baba-Vanga-her-11-predictions-have-come-true-this-year

இந்த வருடம் ஹன்னா கரோல் வெளியிட்டவற்றில் 11 கணிப்புகள் அப்படியே துல்லியமாக நடந்துள்ளது.

கியூபா நாட்டைச் சேர்ந்த பாபா வங்கா, வருங்காலம் பற்றிய பல்வேறு கணிப்புகளை அவ்வப்போது வெளியிடுவார். அவர் கூறியது போலவே நடக்கும் போது அவரது கணிப்பை அறிந்து பலரும் ஆச்சரியமடைவது வழக்கம். இதனால் அவர் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்நிலையில்  பாபா வங்காவை போலவே அமெரிக்காவை சேர்ந்த ஹன்னா கரோல் என்ற 19 வயது பெண்ணும் எதிர்காலம் பற்றிய கணிப்புகளை துல்லியமாக வெளியிட்டு கவனம் ஈர்த்து வருகிறார்.

2022ஆம் ஆண்டிற்கான 28 ஜோதிட கணிப்புகளை கடந்த ஜனவரி மாதத்தில் வெளியிட்டிருந்தார் ஹன்னா கரோல். இதுவரை அவர் வெளியிட்டவற்றில் 11 கணிப்புகள் அப்படியே துல்லியமாக நடந்துள்ளது. ஹாரி ஸ்டைல்ஸ் மற்றும் பியோனஸின் புதிய ஆல்பங்கள் வெளியீடு; பாப் பாடகி ரிஹானா கர்ப்பமடைவது; பிரியங்கா சோப்ரா குழந்தை தத்தெடுப்பது; கிம் கார்தஷியன் விவாகரத்து என்று அவர் கணித்த விஷயங்கள் அப்படியே நடந்தது.

image

மேலும் ஹன்னா கணித்ததில் மிக முக்கியமான ஒன்று இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மறைவு. கடந்த ஜனவரி மாதம் ஹன்னா கணித்திருந்த போது ராணி எலிசபெத் இந்த ஆண்டு மறைந்து விடுவார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, உண்மையிலேயே நடந்துள்ள விஷயம், பலரது கவனத்தையும் ஈர்த்து ஹன்னாவை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

அமெரிக்க மாடல் கெண்டால் ஜென்னருக்கு நிச்சயதார்த்தம் நடக்கும்; அமெரிக்க ஊடகவியலாளர் கோர்ட்னி கர்தாஷியன் கர்ப்பமடைவர் உள்ளிட்ட நிறைவேறாமல் இருக்கும் எஞ்சிய கணிப்புகள் விரைவில் நிறைவேறும் என  ஹன்னா கரோல் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஹன்னா கணித்த விஷயங்கள் நடந்து வருவதால், அவரை ஏராளமானோர் பின்தொடரவும் செய்கிறார்கள். அது மட்டுமில்லாமல், தற்போது இதனை ஒரு தொழில் ஆகவே ஹன்னா தொடங்கியுள்ள நிலையில், மாதத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1.36 லட்சம் வரை அவர் சம்பாதித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதையும் படிக்கலாமே: இந்தியாவில் ஊடுருவியிருக்கும் SOVA வைரஸ்! பணத்தை பாதுக்காப்பது எப்படி?

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்