
குடிபோதையில் தள்ளாடிக் கொண்டு வந்து பாடம் நடத்திய தலைமையாசிரியரை பள்ளிக்குழந்தைகள் கேலி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிக்கு எதிராக மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டிய பொறுப்புள்ள தலைமையாசிரியரே, குடிபோதையில் தள்ளாடிக் கொண்டு வந்தால் யாரிடம் போய் முறையிடுவது? அப்படி ஒரு சம்பவம் உத்திரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பில்ஹவுர் நகருக்கு உட்பட்டு நிவாடா கிராமம் உள்ளது. இங்கே செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் தலைமையாசிரியர் ஒருவர் குடிபோதையில் வந்த மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். அவரால் சரிவர நிற்கக்கூட முடியவில்லை. தள்ளாடிக் கொண்டிருந்தார். அவரை சூழ்ந்து கொண்ட பள்ளி குழந்தைகள், அவரது தலையை பிடித்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் அது நடக்கவில்லை. அந்த சம்பவம் வேடிக்கையாக சில மணிநேரம் நீண்டது. முயன்று முயன்று பார்த்தக் குழந்தைகளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. உடனே கேலி செய்து சிரித்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.