[X] Close

தொடர் மழையால் நிரம்பிய ஏரிகள் - விவசாயிகள் மகிழ்ச்சி

Lakes-filled-with-rainfall---farmers-happiness

சேலம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழைக்கு பாசன ஏரிகள் நிரம்பியுள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement

கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே நீர் நிலைகள், அணைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் பெய்து தொடர் மழையால்,  காடையாம்பட்டி மற்றும் சேர்வராயன் மலைத்தொடர் பகுதிகளில் உள்ள குளங்கள்,தடுப்பணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும்,டேனிஷ்பேட்டையில் உள்ள கோட்டேரி, செட்டியப்பட்டி ஏரி, வட்டகாடு ஏரி, உள்ளிட்ட பாசன ஏரிகளும் முழுமையாக நிறம்பியுள்ளன. இதனையடுத்து ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement
[X] Close