Published : 22,Aug 2022 06:32 PM
3 காவல் அதிகாரிகள் ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ! அமெரிக்காவில் மீண்டுமொரு சர்ச்சை

அமெரிக்காவில் ஆர்கன்சாஸ் காவல்துறை அதிகாரிகள் மூன்று பேர் சேர்ந்து ஒருவரை சரமாரியாக தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் என்ற இடத்தில் க்ராஃபோர்ட் (Crawford) கவுண்டி பகுதியில் சந்தேகப்படும்படியாக நடந்து கொண்டதாகக் கூறி ஒருவரை மூன்று காவல் அதிகாரிகள் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர். அவரது தலையில் பல முறை குத்தி, அவரை தரையில் மண்டியிடச் செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த ஒருவர் செல்போனின் பதிவு செய்துள்ளார்.
தங்களை ஒருவர் படம்பிடிப்பதை பார்த்த ஒரு காவல் அதிகாரி வீடியோ எடுப்பதை நிறுத்துமாறு சைகை காட்டும் காட்சிகளையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தை படம்பிடித்தவர் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட, வீடியோ வைரலாகி கடும் அதிர்வலைகளை கிளப்பியது. இதையடுத்து தாக்குதல் நடத்திய மூன்று காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#BREAKING: Arkansas State Police launch investigation into this incident, captured on camera, outside a convenience store in Crawford County. ASP says two county deputies and a Mulberry police officer were involved. #ARNews
— Mitchell McCoy (@MitchellMcCoy) August 21, 2022
**WARNING: GRAPHIC VIDEO / No audio** pic.twitter.com/dYE0htfAsf
தாக்குதலுக்கு ஆளான நபர் மல்பெரியில் உள்ள கன்வீனியன்ஸ் ஸ்டோர் ஊழியருக்கு மிரட்டல் விடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் அவரிடம் விசாரணை செய்தபோது ஒரு போலீஸ்காரரை தரையில் தள்ளி, அவரது தலையின் பின்புறத்தில் குத்தியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.