பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் மனைவி பேகம் குல்சூம் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.
பனாமா கேட் ஊழல் வழக்கில் நவாஸ் செரீப் தனது பிரதமர் பதவியை இழந்தார். அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காலியான நவாஸ் செரீப்பின் லாகூர் தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. அதில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில் நவாஸ் செரீப்பின் மனைவி குல்சூம் நவாஸ் போட்டியிட்டார். முன்னாள் கிரிக்கெட் விரர் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த யாஸ்மின் ரசீதும் இத்தேர்தலில் போட்டியிட்டார்.
குல்சூம், இம்ரான்கான் கட்சி வேட்பாளர் இடையே கடும் போட்டி நிலவியது. முடிவில், நவாஸ் ஷெரிஃபின் மனைவி பேகம் குல்சூம் 13 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் இம்ரான்கான் கட்சி வேட்பாளரை தோற்கடித்தார். குல்கம் 59,413 வாக்குகளும், யாஸ்மின் ரசீத் 46,145 வாக்குகளும் பெற்றனர். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நவாஸ் ஷெரீப் யாஸ்மின் ரசீதை 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
முன்னதாக நவாஸ் ஷெரீப் தனக்கு பதில் தன் மனைவியை பிரதமராக்க திட்டமிட்டுள்ளார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. நவாசுக்கு பதில் அப்பாஸி தற்காலிக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai