Published : 08,Aug 2022 10:37 PM

விராட் கோலி உள்ளே.! பும்ராவுக்கு ஓய்வு.. ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

virat-kholi-in---asia-cup-indian-squad-announced--

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் என ஆசியாவின் ஐந்து நாடுகள் பங்குபெறும் டி20க்கான ஆசிய கோப்பை இந்த மாத இறுதியில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆசிய கோப்பைகான இந்திய அணி வீரர்களின் பெயர் பட்டியலை அறிவித்துள்ளது பிசிசிஐ.

வாய்ப்பு வழங்கப்படாமல் ஓய்வில் வைக்கப்பட்டிருந்த விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். மற்றும் இடுப்பில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்த கேஎல் ராகுலும் அணிக்கு திரும்பியுள்ளார். மேலும் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா ம்ற்றும் ஹர்சல் படேல் இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

image

அணி விவரம் : ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ஜடேஜா, அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், பிஸ்னாய், புவனேஷ் குமார், அர்ஸ்தீப் சிங், ஆவேஷ் கான்.

பேக்கப் வீர்ரர்கள்: ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் பட்டேல், தீபக் சாஹர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்